ஏழு கடல் ஏழு மலை — அக்டோபர் 1 முதல் திரையரங்குகளில்
By V House Productions
ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ஏழு கடல் ஏழு மலை. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
படப்பிடிப்பு நிறைவடைந்து சில வருடங்கள் கடந்த நிலையில், பல்வேறு நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களுக்கு இப்படம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. சமீபகாலமாக இப்படத்தை இவ்வருடத்திற்குள் திரைக்குக் கொண்டு வரும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில், ஏழு கடல் ஏழு மலை வரும் அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறது என்பதை, வெளியீட்டுத் தேதியை அறிவிக்கும் ரிலீஸ் டீசருடன் படக்குழு அறிவித்துள்ளது.
ரிலீஸ் டீசரில் நிவின் பாலி, சூரி மற்றும் எலி சம்பந்தப்பட்ட காட்சிகள் கவனம் ஈர்க்கின்றன. ஒரு நல்ல திரை அனுபவத்திற்கு ரசிகர்களைத் தயார்படுத்தும் வகையில் இந்த டீசர் அமைந்துள்ளது.
In this story